நாமக்கல் மாவட்டம் மணியனூரில் மத்திபாளையம் பிரிவு சாலை அருகே உள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் அருகே கழிவு நீர் குட்டை உள்ளதால் குடிநீர், கழிவுநீருடன் கலந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-பிரவின், நாமக்கல்.