பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முஹம்மதுபட்டினம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடு்ம்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் போதிய அளவு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.