பொது குடிநீர்குழாய் ஏற்படுத்தி தரப்படுமா?

Update: 2022-09-13 12:17 GMT

பெரம்பலூர் மாவட்டம் , துறையூர்-பெரம்பலூர் மெயின்ரோட்டில் லாடபுரம் பிரிவுச் சாலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக்கிணறுகளில் உள்ள நீர்‌ உப்பு நீராக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. கோடைக்காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடுகிறது. அதனால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, லாடபுரம் வழியாக அம்மாப்பாளையம் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் பொது குடிநீர் குழாய் இணைப்பு ஒன்று கொடுத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்