ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் வாலிபர்கள் சிலர் தங்களது மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையை கடக்கும் பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர்கள் மற்றும் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.