மாணவர்கள் சிரமம்

Update: 2026-08-02 11:22 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வர காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான பஸ் வசதி இல்லை. தற்போது இயங்கி வரும் பஸ்களும் கல்லூரி வரை செல்லாமல் வெகு தூரத்திற்கு முன்பே மாணவர்களை இறக்கி செல்வதால் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிைல உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுவதால் சம்பந்தபட்ட அதிகாரிகள் மாணவர்கள் நலன் கருதி மேற்கண்ட வழி தடத்தில் இயக்கப்படும் பஸ்களை கல்லூரி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்