மேம்பால சுவரில் ஆபத்தான கம்பி

Update: 2026-08-02 10:06 GMT

கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அங்கு லட்சுமி மில்ஸ் அருகே பக்கவாட்டில் இரும்பு கம்பி வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது. அதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள தண்ணீர் பாட்டிலை பொருத்தி வைத்துள்ளனர். ஆனால் அந்த ஆபத்தான கம்பியை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை. எனவே மேம்பால பக்கவாட்டு சுவரில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் அந்த இரும்பு கம்பியை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்