திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் துவரங்குறிச்சி பஸ் நிலையத்தை சுற்றி சிறுசிறு கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை சாலையை ஆக்கிரமித்தவாறு நிறுத்துவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பஸ் நிலைய பகுதியில் ஆடு, மாடுகள் ஆங்காங்கே படுத்துக் கிடப்பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் பஸ்கள் பஸ் நிலையத்துக்கு உள்ளே வந்து செல்வதற்கு தாமதமாகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.