கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து ஆத்துமேடு, ஆர்.வெள்ளோடு, ஈசநத்தம், சூலபுரம் வழியாக மல்லப்புரம் வரை நகர பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் பயணிக்க பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். மாற்று போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த வழித்தடத்தில் போதிய நகர பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.