போக்குவரத்து நெரிசல்

Update: 2026-07-19 12:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் முக்கியச் சாலைகளில் கடைகளின் முன்புறம் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் முக்கியச் சாலைகளில் வாகனங்கள் செல்வதிலும், பாதசாரிகள் நடந்து செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.