ஊரப்பாக்கம் ஸ்கூல் பஸ் நிறுத்தத்தில் முன்பு பயணிகள் நிற்பதற்கு ஏதுவாக 2 பக்கங்களிலும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் இப்போது அது இல்லை. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளிவந்து ஊரப்பாக்கம் சிக்னலை கடந்து செல்லும் எந்த மாநகர பஸ்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிற்பது கிடையாது. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக வரக்கூடிய பஸ்களில் மட்டுமே ஊரப்பாக்கம் ஸ்கூல் பஸ் நிறுத்தத்தில் ஏறும் பயணிகளால் பயணிக்கும் சூழல் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை தீர்வு காணவேண்டும்.