விபத்து அபாயம்

Update: 2026-06-28 16:19 GMT

ஏரியூர் பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு ராட்சத கம்பிகள் உள்பட கட்டுமான பொருட்கள் டிராக்டர்களில் ஏற்றிச் செல்லப்பட்டு வருகின்றன. இதில் ராட்சத கம்பிகள் எந்தவித எச்சரிக்கை அறிவிப்பின்றி கொண்டு செல்கின்றனர். இதை கவனிக்காமல் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது சிறுசிறு விபத்துகளும் நடக்கின்றன. பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்