பஸ் வசதி வேண்டும்

Update: 2026-06-14 11:11 GMT

புதுக்கோட்டை, தாயினிப்பட்டி பஞ்சாயத்து இலுப்பக்குடிப்பட்டி வழியாக இலுப்பூருக்கு இயக்கப்பட்ட பஸ் முறையான காரணமின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியோர்கள் திருச்சி, புதுக்கோட்டை செல்வதற்கு 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஒடுக்கூருக்கு சென்று பஸ் ஏறி சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் அவசரத் தேவைக்கு ரூ.300 வரை ஆட்டோ வாடகை தந்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்