பயணிகள் அவதி

Update: 2026-06-07 17:32 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து நெல்கட்டும்செவல் வழியாக வாசுதேவநல்லூருக்கு அரசு டவுன் பஸ் (வழித்தட எண் 35 பி) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் பக்கவாட்டில் சங்கனாப்பேரி என்று எழுதுவதற்கு பதிலாக சங்கனாபுரம் என்று தவறாக எழுதப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் குழப்பமுற்று வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்சில் சரியாக ஊர் பெயரை எழுத அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்