புழல் நீர்தேக்கம் அருகே தனியார் திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நின்றுக்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது இல்லை. இதனால் போக்குவரத்து சிக்னல் உள்ளிட்ட சாலை விதிகளை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்கின்றனர். சிக்னல் விழுந்தாலும் கடந்து செல்லமுடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தவிப்பது வாடிக்கையாகிவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.