சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதிகளில் சிலர் ஆபத்தை உணராமல் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் சாலையை கடக்க காத்து நிற்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் சாலையில் எதிரே வரும் பிற வாகனஓட்டிகளும் அச்சத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?