விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே கே.கே.நகரில் உள்ள சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் விசாலமாக இருந்த சாலையின் அளவு சுருங்கிப்போயுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.