ஈரோடு காளைமாட்டு சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ரெயில் நிலைய பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கான சிக்னல் கம்பத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை நிற விளக்குகள் எரியவில்லை. இதனால் காந்திஜிரோடு வழியாக வந்த வாகனங்கள் செல்வதற்கு பச்சை நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்போதே, ரெயில் நிலைய பகுதியில் இருந்து வந்த வாகனங்களும் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே காளைமாட்டு சிலை பகுதியில் பழுதடைந்த சிக்னல் கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.