பந்தலூர் அய்யன்கொல்லி அருகே குதிரைவட்டம் பகுதியில் மரங்களின் கிளைகள் சாலை வரை நீண்டு காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மரக்கிளைகள் அடிக்கடி உடைந்து மின்கம்பிகள் மீது விழுவதால் மின்தடை ஏற்படுகிறது. அத்துடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இடையூறு ஏற்படுத்தும் மரக்கிளைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.