போலீஸ் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-05-17 12:14 GMT

வடபெரும்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க செல்லும் குடிமகன்கள் அந்த கடையின் முன்பு மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் வாகனங்களை அப்படியே ஆங்காங்கு நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் அந்த டாஸ்மாக் கடையை ஒட்டிய குறிப்பிட்ட தூரத்துக்கு மட்டும் வாகனங்கள் எளிதாக கடந்து செல்லமுடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. குடிமகன்களின் வெறியாட்டத்துக்கு போலீசார் கடிவாளம் போடவேண்டும்.

மேலும் செய்திகள்