அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் குணமங்கலத்தில் இருந்து கீழநத்தம் செல்லும் அரியலூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சீராபரி ஏரி அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்டப்படாமல் உள்ள நிலையில், அதிக மழை பெய்யும்போது சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் நிரம்பி வழிகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி இப்பகுதியில் பாலம் கட்டிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.