வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-02-01 11:11 GMT

திருச்சி மாவட்டம் புல்லம்பாடி வட்டம் ரெட்டிமாங்குடியில் இருந்து தச்சங்குறிச்சி செல்லும் தார்சாலை வழியாக தினமும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையோரம் உள்ள புளிய மரக்கிளைகள் நீண்டு வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்