கோவை வழியாக செல்லும் திருச்செந்தூர்-பாலக்காடு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மேற்கூரைகள் ஆங்காங்கே உடைந்து காணப்படுகின்றன. அதை மறைக்க தகர சீட் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அவை பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் வகையில் தொங்கி கொண்டு இருக்கின்றன. இதனால் ரெயில் பயணிகள் அச்சத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே ரெயில் பெட்டி மேற்கூரையை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.