நெய்வேலி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை- முத்தாண்டிக்குப்பம் செல்லும் சாலையில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு வேளைகளில் சாலையிலேயே படுத்து கிடப்பதால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.