பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2025-09-28 18:08 GMT
குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி- குண்டியமல்லூர் செல்லும் சாலையில் புதியதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே சாலையின் இருபுறமும் மணலை கொட்டி பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்