போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-09-14 10:34 GMT

கூடலூரில் இருந்து கேரள பகுதிகளுக்கு செல்லும் சாலையோரங்களில் பயன்படுத்தாத வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது தவிர அங்குள்ள கடைகளுக்கு வரும் வாகனங்களும் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு ஏற்படும் போக்குவரத்து பிரச்சிைனக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்