கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தினுள் இருசக்கர வாகனஓட்டிகள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.