போக்குவரத்து நெரிசல்

Update: 2025-06-15 11:49 GMT

அரியலூர் தலை நகரிலுள்ள பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பஸ் நிலையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் அண்ணா சிலையிலிருந்து மேற்கு புறம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு அதிக அளவில் பஸ் சென்று வருகிறது. மேலும் இங்கு வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட நூலகம், நீதிமன்றம் உள்ளது. இந்த குறுகிய சாலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தென் புறத்தில் அதிகளவில் மினி பஸ்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நீண்ட நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றி செல்லும் 108 ஆம்பு லன்ஸ்கள், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் ஆகியவை செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி