மதுரை பரவை பகுதியில் இருந்து பாத்திமா கல்லூரி வரை அந்த வழியாக செல்லும் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பீதி அடைகின்றனர். சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பீதியுடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதி வேகத்தில் செல்லும் பேருந்துகளை ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.