மதுரை கோரிப்பாளையம் சிக்னல் பகுதியில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னலை மதிப்பதில்லை. விதிகளை மீறி செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சிறு சிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே போக்குவரத்து போலீசார் நெரிசலை தடுக்கவும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.