நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் முறையாக வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்தாமல், தேர் செல்லும் ரத வீதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே ரத வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.
-சுகுமார், நாமக்கல்.