மதுரை, பைபாஸ் ரோடு, பொன்மேனி பகுதியில் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளது. போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த பகுதியில் சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் காலை நேரங்களில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. போக்குவரத்து சிக்னலை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?