நாமக்கல் மாநகரில் போக்குவரத்து நெரிசல் சகஜமான ஒன்றாக இருந்து வருகிறது. புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்ட பிறகு மணிக்கூண்டு, பரமத்தி சாலை, மோகனூர் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. இருப்பினும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள கோட்டை சாலையில் காலை, மாலை நேரங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?