மதுரை நகர் பெரியார் பஸ் நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர்.பஸ் நிலையத்தில் இருந்து நேரடியாக கீழடிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. மதுரையில் இருந்து தினமும் அதிகளவில் வெளியூர் மற்றும் வெளிநாட்டவர்கள் கீழடி சென்று அருங்காட்சியகத்தை பார்வையிடுகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தொன்மையான வரலாற்றை அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கூடுதலாக மதுரையில் இருந்து கீழடிக்கு நேரடி பஸ் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.