திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பகுதிக்கு தினமும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரும் சில பஸ்கள் திருச்சி ஜங்சன் பகுதிக்கு வரும்போது, அதற்கான பஸ் நிறுத்தத்தில் நிற்காமல், சில மீட்டருக்கு முன்பே வளைவுபகுதியில் சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், அந்த பஸ் நிறுத்ததில் நிற்கும் பயணிகள் பலர் அங்கிருந்து ஓடி வந்து பஸ்சில் ஏறுகின்றனர். இதனால் சிலர் தவறி விழுந்து காயமும் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.