தமிழக-கேரள எல்லையான பாட்டவயலில் இருந்து கூடலூருக்கு காலை 6 மணி முதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும். தற்போது காலை 6.45 மணி முதல் இயக்குவதால் ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மேபீல்டு உள்பட பல்வேறு கிராமங்களுக்கும் அந்த பஸ்கள் சென்று வருவதால் கூடலூருக்கு வருவதற்கு மிகவும் தாமதமாகிறது. மேலும் கூடுதலாக பஸ்கள் இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.