கூடலூரில் இருந்து கர்நாடகாவின் குண்டல்பெட், சாம்ராஜ் நகர், பண்ணாரி வழியாக சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று கூடலூரில் இருந்து மதுரை மற்றும் ஏர்வாடிக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன் பெறுவார்கள். அதற்கு அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும்.