லால்குடி சுங்கச்சாவடி பிரதான சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பனை அடியான் கோவில் மற்றும் அகிலாண்டபுரம் சாலையோரத்தில் பட்டுப்போன மாமரம், புளியமரம் உள்ளன. இந்த மரங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.