திருச்சி கல்லுக்குழிக்கு செல்லும் திருச்சி ரெயில் நிலைய கிழக்கு கேட் நுழைவாயில் சாலையில் அருகருகே 3 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ணக் கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் வேகத்தடைகள் உள்ள இடத்தில் தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.