புதுச்சேரி - விழுப்புரம் இடையே கண்டமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் பணி நடப்பதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சுற்றி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், கூடுதல் நேரம் செலவாகிறது. பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.