ஆப்பக்கூடலில் இருந்து கீழ்வானி, கருங்கரடு, கணபதிபாளையம், புதுக்கரைப்புதூர், பாரியூர் வழியாக கோபிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?