பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-10-04 14:24 GMT

அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக கோபி செல்வதற்கு காலை 6.20, 6.50 மணிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு மேல் 8.55 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். புறநகர் மற்றும் தனியார் பஸ்களில் கட்டணம் கொடுத்து படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ய வேண்டிய அவலநிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 7.45 மணி மற்றும் 8.25 மணிக்கு மேற்கண்ட வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்