அந்தியூரில் இருந்து குந்துபாயூர், ஒலகடம், குட்டமேடு, புகையிலைரெட்டியூர் வழியாக மும்மிரெட்டிபாளையம் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி கிராம மக்கள் மற்றும் ஒலகடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் நலன்கருதி மேற்கண்ட வழித்தடம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?