திண்டுக்கல்-திருச்சி சாலையில் புனித வளனார் மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை, சமூக விரோதிகளால் சுகாதாரமற்ற இடமாக மாறியுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் வெயிலிலும், மழையிலும் சாலையோரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே நிழற்குடையை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.