நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளது. மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் போதிய பஸ் வசதி இல்லாததால், பஸ்களின் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான பயணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் பஸ்களில் இருந்து மாணவர்கள் கீழே தவறி விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை அந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்.