மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிபஸ் நிலையம் அருகில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இப்பகுதியில் மருத்துவமனைகள் இயங்கி வரும் நிலையில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர தேவைக்கு வரும் வாகனங்கள் சாலை ஆக்கிரமிப்பால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.