அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-08-08 14:38 GMT

அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட, கல்லூரி மாணவ- மாணவிகள், அன்றாட கூலித்தொழிலாளர்கள் சென்றனர். கொரோனா 2-வது அலைக்கு பின்னர், அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு கிராமங்கள் வழியாக பவானிக்கு அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்