விபத்து அபாயம்

Update: 2022-08-08 14:18 GMT
நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக துக்க நிகழ்ச்சிக்கு செல்வோர் இதுபோன்று சரக்கு வாகனங்களில் பயணிப்பதால் போலீசாரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும் சரக்கு வாகனங்களில் அதிக அளவு ஆட்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. எனவே இதுபோன்ற போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்