போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-08-07 15:05 GMT
நாமக்கல் மணிக்கூண்டு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.இதனை சுற்றிலும் ஏராளமான நபர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் இப்பகுதி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்று காட்சி அளிக்கிறது. இங்கு போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும். அதற்கு உரிய அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்

மேலும் செய்திகள்