விருதுநகரில் இருந்து டி.கல்லுப்பட்டி வழியாக இயக்கப்படும் சில பஸ்கள் வெ.வெங்கடாசலபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். மேலும் மாற்று பஸ் வரும் வரை காத்திருந்த பயணிப்பதால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.