கருமத்தம்பட்டடியில் இருந்து சோமனூர்-சூலூர் வழியாக குமாரபாளையத்திற்கு தினமும் 4 முறை 30 எம் என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு முறை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் அந்த பஸ்சை மீண்டும் 4 முறை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.